Take a fresh look at your lifestyle.

வீதியில் படுத்து உறங்கியவர் மீது ஏறிய டிப்பர்.. மாங்குளத்தில் கோர சம்பவம்

Loading...

மாங்குளம்- பனிக்கன்குளம் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் வீதியில் படுத்துறங்கியவர் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பனிக்கன் குளம் பகுதியில் 35 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வீதியில் படுத்திருந்துள்ளார்.

இந்நிலையில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் படுத்திருந்தவரின் கால்களில் ஏறியுள்ளது.

Loading...

இதனால் இரு கால்களும் சிதைந்த நிலையில் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்ட குறித்த நபர் 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் மதுபோதையில் படுத்திருந்தாரா அல்லது வேறு நோய்நிலை காரணமாக படுத்திருந்தாரா என பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More