Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 04-04-2019

Loading...

ஏப்ரல் மாதத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் உச்சமடைகின்றன. மேஷ ராசியில் சூரியனும், மீனம் ராசியில் சுக்கிரனும் உச்சமடைகின்றனர்.

தனுசு ராசியில் கேது, சனி கூட்டணியோடு அதிசார குருவும் தொடர்கிறார். புதன் மீனத்தில் நீசமடைகிறார் ரிஷபத்தில் செவ்வாய், மிதுனம் ராசியில் ராகு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

ராசிக்கு 12ஆம் வீட்டில் உள்ள சூரியன் மாத பிற்பகுதியில் உங்கள் ராசியில் உச்சமடைவதால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த மாதம் பணப்புழக்கம்

அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் தன ஸ்தானத்தில் இருக்கிறார். ராசிக்கு ஏழாம் அதிபதியான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பது சிறப்பானது.

தடைகள் நீங்கும். செல்வம் பெருகும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் உச்சமடைகிறார். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையேயான காதல் அதிகரிக்கும்.

வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குமூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்க்கும் குருவின் கருணையினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

புதன் 12ஆம் வீட்டிற்கு செல்வதால் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் இடம் மாறுதல் கிடைக்கும். எட்டாம் வீட்டை செவ்வாய் பார்ப்பதால் பயணத்தின் போது கவனம் தேவை. மாணவர்கள் நன்றாக படித்து தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள். நன்மைகள் நிறைந்த நல்ல மாதம் இதுவாகும்.

ரிஷபம்

லாப ஸ்தானத்தில் உள்ள சூரியன் மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் மறைகிறார். செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். திருமணம் கைகூடி வரும்.

பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றிணைவார்கள். உடம்பில் சூடு அதிகரிக்கும் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டினை செவ்வாய் பார்க்கிறார். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கோபத்தை தவிர்க்கவும்.

வீடு மனை வாங்குவதற்கான யோகம் வந்து விட்டது. அற்புதமான வேலை கிடைக்கும். குரு சனி கேது உடன் இணைந்து அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

மனதில் இனம் புரியாத பாரம் அழுத்தும், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மாத பிற்பகுதியில் புதனும் சுக்கிரனும் லாப ஸ்தானத்தில் கூட்டணி அமைப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலை விசயமாக சிலர் வெளிநாடு செல்வீர்கள்.

மிதுனம்

மாத பிற்பகுதியில் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் அமர்வதால் பதவி உயர்வு கிடைக்கும், தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஏழாம் வீட்டில் சனி, கேது உடன் இணைந்து அமர்ந்துள்ளார்.

குரு ஏழாம் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பது சிறப்பான அம்சம். கேது ஏழாம் வீட்டில் சனியோடு இருக்கிறார். இது சிறப்பான அம்சம். தீமைகள் விலகி ஓடும்.

லாட்டரி உள்ளிட்ட அதிர்ஷ்டங்களினால் வருமானம் அதிகரிக்கும், கலைத்துறையினருக்கு முன்னேற்றகரமான மாதம் இது. சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால் பணி செய்யும் இடத்தில் உற்சாகம் கூடும். வேலைக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். உங்களின் மனதில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். வேலை விசயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்களின் வாழ்க்கைத்துணையுடன் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். சளி தொந்தரவுகள் வரும். பெண்களுக்கு இது மிகச்சிறந்த மாதம். வேலையில் புரமோசன் கிடைக்கும்.

கடகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். அப்பா வழியில் நன்மைகள் நடைபெறும். திருமண விசயங்கள் கை கூடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

கார் வாங்கவும் வாய்ப்பு உள்ளது. எட்டாம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்து உள்ளார். பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பு கூடும். வாழ்க்கைத்துணையுடன் காதல் நினைவுகளும் பேச்சுக்களும் அதிகரிக்கும்.

சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் உச்ச நிலையில் அமரப்போவதால் உங்களின் நிதிப்பிரச்சினை முடிவுக்கு வரும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு ஏற்றமும் மாற்றமும் அமையும்.

சிம்மம்

உங்கள் ராசி அதிபதி சூரியன் எட்டாம் வீட்டில் இருந்து பாக்ய ஸ்தானத்தில் உச்சமடைவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். உடல் நலக்கோளாறுகள் நீங்கும்.

குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவதால் குறைகள் நீங்கும்.

மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் உச்சமடைந்துள்ள சூரியனை குரு பார்வையிடுவதால் நன்மைகள் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமரப்போவதால் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்திருக்கவும்.

உங்களின் காதல் உணர்வுகள் உற்சாகமாக இருக்கும். உங்களின் சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே சிறு ஊடல் ஏற்படும் கவனம் தேவை. சிம்ம ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான மாதம். பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். சொத்து சுகம் சேரும்.

Loading...

கன்னி

சூரியன் ஏழாம் வீட்டில் இருந்து ராசியை பார்க்கிறார் மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டிற்கு சூரியன் செல்வதால் கடனுதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் சின்னச் சின்ன சண்டைகள் நடைபெறும். ஊடலை கூடலாக மாற்றுங்கள்.

முன்னோர்கள் சொத்துக்கள் கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம் பொறுமை தேவை. பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். உடம்பில் கவனம் செலுத்துங்கள். மனதை அமைதியாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டை குரு பார்வையிடுவதால் புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் உச்சம் பெற்று அமரப்போகிறார். இந்த மாதம் கிரக நிலைகள் அற்புதமாக அமைந்திருக்கிறது. வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். ராசி அதிபதி சுக்கிரன் 5ஆம் வீட்டில் புதனுடன் இருக்கிறார். இது அற்புதமான மகாலட்சுமி யோகம் தரக்கூடியது.

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும். இந்த மாதம் பிரமாதமான மாதம். வெற்றிகள் கிடைக்கும் மாதம். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நல்லதே நினைக்க நல்லதே நடக்கும்.

பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றிகள் தேடி வரும் தொழில் முனைவோருக்கு நன்மைகள் நடைபெறும். திருமண வைபவங்கள் கூடி வரும். வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும். வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவீர்கள். தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்படும். தொந்தரவுகள் விலகும்.

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமரப்போகிறார். அப்பாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். கண்களின் மீது கவனமும் அக்கறையும் செலுத்துங்கள்.

ராசி அதிபதி செவ்வாய் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் திருமண யோகம் கை கூடி வரும். அண்ணன் தம்பிகளின் ஒத்துழைப்பும் உதவியும் கிடைக்கும். குரு பகவான் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அதிசாரம் பெற்று அமர்ந்துள்ளது நல்ல அம்சம்.

மிகச்சிறந்த ஏற்றம் அமையும். வசிய தன்மை அமையும். வியாபாரத்தில் லாபம் அமையும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருக்கிறார் வெளிநாட்டு யோகம் அமையும் மாத பிற்பகுதியில் உச்சம் பெற்று 5ஆம் வீட்டில் அமர்வது சிறப்பம்சம்.

தனுசு

ராசிக்கு நான்காம் வீட்டில் உள்ள சூரியன் 5ஆம் வீட்டில் அமரப்போகிறார். செவ்வாய் ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் பணத்தை அதிக முதலீடு செய்ய வேண்டாம். வியாபாரத்திற்குத் தேவையான கடன் உதவி கிடைக்கும், சிலருக்கு புதிய வேலையும் இட மாற்றமும் கிடைக்கும். ஒரு சிலருக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த நிலை மாறும்.

ராசி அதிபதி குரு ராசிக்குள் சனி, கேது உடன் இணைந்திருப்பதால் பண வரவு உண்டு. சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும், சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும்.

சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் புதனுடன் அமைந்துள்ளார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால் வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உடலில் சிலருக்கு அசதி ஏற்படும் என்பதால் தேவையான அளவிற்கு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.

மகரம்

உங்களுக்கு மாற்றமும் ஏற்றமும் கலந்த மாதம் இது. சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமைந்துள்ளார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நான்காம் வீட்டிற்கு சூரியன் செல்கிறார்.

செவ்வாய் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்துள்ளதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். சுக்கிரன் புதனோடு இணைந்து இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பண வருமானம் கிடைக்கும். பெண் தொழில் முனைவோர்களின் தொழில் சிறப்படையும்.

உடல் நலனில் அதிக அக்கறை காட்டுங்கள். வண்டி வாகனத்தில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாடு யோகம் கூடி வரும். உயர்கல்வி வாய்ப்பு அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே… இந்த மாதம் பெண்களுக்கு நல்ல மாதம். ராசிக்குள் சுக்கிரன், புதன் இணைந்திருப்பதால் வீட்டை அழகுபடுத்துவீர்கள். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடுவீர்கள், வீடு வாங்கும் யோகம் வந்திருக்கிறது.

வண்டி வாகனம் வாங்க யோகம் வந்து விட்டது. குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து மூன்றாம்

வீட்டை பார்ப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்வையிடுவதால் திருமண தடைகள் நீங்கும்.

வெளிநாட்டு யோகம் அமையும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்வதால் முகப்பொலிவு கூடும். குடும்பத்தில் சந்தோசம் அதிகரிக்கும். இது நன்மை தரும் மாதம்.

மீனம்

ராசிக்குள் சூரியன் அமர்ந்துள்ளார். வேலைகள் சிறப்பாக அமையும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாதத்தின் பிற்பகுதியில் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார்.

பத்தில் குரு அமர்வதால் பதவியில் மாற்றம் ஏற்படும். புதன் விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் உடன் அமர்ந்துள்ளார். மாத பிற்பகுதியில் ராசிக்குள் நீச நிலையில் அமரப்போவதால் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் அக்கறை காட்டுங்கள்.

நல்லவர்களையும் பகைவர்களையும் இனம் கண்டு கொள்ளுங்கள். குருவின் பார்வை ராசிக்கு இரண்டாம் வீடு, நான்காம் பார்க்கிறார். தொழில் வியாபாரம் நன்றாக நடைபெறும் பண வரவு அதிகரிக்கும்.

உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு வெளிநாடுகளில் படிக்கக் கூடிய யோகம் உண்டாகும். எந்த ஒரு விசயத்தையும் போரடி வெற்றி பெறவேண்டியிருக்கும்.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More