Take a fresh look at your lifestyle.

சாதாரண தலைவலி தானே.. பனடோல் போட்டால் சரியாகிடும்.. என்பவர்களே.. உங்களிற்கு இது ஓர் எச்சரிக்கை பதிவு

Loading...

மூளை பகுதிக்குள் வளர்ந்த கட்டியினால் கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் ஒருவர் கட்டியை அகற்ற தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டும் சிகிச்சை பயனின்றி இன்று திங்கட்கிழமை பிற்பகல் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் தட்சணாமருதமடு பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா (வயது-28) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவர் எதிர்வரும் 10 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

இந்நிலையில், நீண்ட நாட்களாக தலையில் ஏற்பட்ட வலியைத் தொடர்ந்து மயக்கமடைந்த இவரை மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

Loading...

அங்கிருந்து அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

தலையில் பாரிய கட்டி ஒன்று இருப்பதைக் கண்டறிந்த வைத்தியர்கள் கட்டியின் அமுக்கத்தினால் மூளையின் பல பாகங்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இந்நிலை மோசமடையாது இருப்பதற்காக உடனடியாக சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொண்டனர்.

இந்நிலையில், வைத்திய தரப்பினால் எதிர்பார்த்த அளவினை விட மூளையின் பல பகுதிகள் மீள புதுப்பிக்க முடியாதவாறு அழிவடைந்து போன காரணத்தினால் இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார் என வைத்திசாலைத் தரப்பு தெரிவித்தது.

இவர் மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கல்வி பயின்று கடந்த வருடம் (2018) செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டியின் அறிகுறிகள் இவரிற்கு நீண்டகாலமாக சிறிது சிறிதாக வெளிக்காட்டப்பட்டு இருந்திருக்க கூடும் என்றும், அதற்கு உரிய முறையில் இவர் சிகிச்சை மேற்கொள்ள தவறி இருந்தமையாலும் இன்று இள வயதில் ஒரு உயிர் இழக்கப்பட்டிருக்கின்றது என வைத்தியசாலை தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாதாரண தலைவலி தானே.. பனடோல் போட்டால் சரியாகிடும்.. என்பவர்களே.. உங்களிற்கு இது ஓர் எச்சரிக்கை பதிவு…

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More