Take a fresh look at your lifestyle.

கனடா செல்ல ஆசையா?? இலங்கை காவாலிகள் நால்வர் மீண்டும் அட்டகாசம்

Loading...

கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஒன்று தொடர்பாக நாம் தொடர்ந்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

குறித்த செய்திகளை அறிய இங்கே கிழிக் செய்யுங்கள்

அத்தோடு குறித்த நபர்கள் தங்களது முகநூல் கணக்குகளை முடக்கிவைத்துக்கொண்டு தலைமறைவாகினர்.

இவர்கள் தொடர்பான தகவல்கள் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பொலிசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இம் மோசடிக் கும்பல் மீண்டும் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது.

Loading...

canada next எனும் போலி முகநூலினூடாக ஆரம்பத்தில் பணம் பறித்தவர்கள் எமது செய்தியினை தொடர்ந்து குறித்த முகநூல் கணக்கை முடக்கி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் குறித்த முகநூலின் பெயரினை canada nortey immigration  மாற்றிக்கொண்டு பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளமை ஆதாரபூர்வமாக எமக்கு கிடைத்துள்ளது.

இம் முகநூலை நான்கு பேரின் பெயரில் இயக்குவதாகவும் இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களே என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களின் போலி பரப்புரைகளை ஆராய்ந்து பார்க்காமல் கனடா ஆசையில் பெரும்பாலானோர் லைக், கொமன்ஸ், சார் பண்ணி பணத்தை இழந்து வருவது வேதனைக்குரியது.

இவ்வாறான மோசடி காவாலிகளிடம் மக்கள் ஏமார்ந்து போகாமல் தங்களது தனிப்பட்ட தகவல்களையும் பெறுமதி மிக்க பணத்தையும் பாதுகாத்து கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றோம்.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More