Take a fresh look at your lifestyle.

அதிகாலையில் கோர விபத்து – யாழிலிருந்து கொழும்பு சென்ற நால்வர் பலி – 7 பேர் படுகாயம்

Loading...

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 7 பேர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பலியானவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் அடங்குவதாக தெரியவருகின்றது.

Loading...

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த Toyota ரக வேன் ஒன்று டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் புத்தளம் நாகவில்லு பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More