Take a fresh look at your lifestyle.

இலங்கை பெண்ணுக்கு விருது வழங்கி கௌரவித்த அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி! குவியும் பாராட்டுக்கள்!!

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் உலகம் முழுவதும் பெண்கள் 10 பேரை தெரிவு செயது வழங்கப்படும் விருது ஒன்றை இலங்கை பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

“பெண்களை ஊக்குவிக்க சர்வதேச விருது” ஒன்றையே குறித்த இலங்கை பெண் வென்றுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்பினால் இந்த விருதை மெரினித லிவேரா என்ற இலங்கை பெண் பெற்றுள்ளார்.

 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட லிவேரா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக செயற்பட்டுள்ளார்.

அவருடன் பங்களாதேஷ், பர்மா, ஜிபோட்டா, எகிப்த்து, ஜோர்தான், அயர்லாந்து மொன்டெனக்ரோ, பேரு மற்றும் டென்சானியா ஆகிய நாடுகளின் பெண்கள் இந்த விருதை வென்றுள்ளனர்.

மேலும் இது போன்ற வெளிநாட்டு செய்திகளுக்கு நமது முத்தமிழ் செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More