Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 02-03-2019

மேஷம்

மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப்பேசுவீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: மதியம் 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக்கொண்டிருக்க வேண்டாம். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக்காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப்போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்னெச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீட்டை புதுப்பிப்பது குறித்து யோசிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடை வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அமோகமான நாள்.

சிம்மம்

சிம்மம்: சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். புது நட்பு மலரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கை
யாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.

கன்னி

கன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் கணிசமாகலாபம் உயரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ரெட் டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.ஆடை,ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More