Take a fresh look at your lifestyle.

கோர விபத்து ஒன்றில் சிக்கிய மோட்டார் சைக்கிள்! பயணிகளின் நிலை என்ன??

மோடார் சைக்கிள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து ஏ9 முதன்மைச் சாலையில் யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்தி வாகையடியில் இன்று நடைபெற்றது.

சாவகச்சேரியிலிருந்து ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், வாகையடியில் திருப்ப முற்பட்ட வேளையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

மூவர் கை கால் முறிந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மந்துவில் மேற்கு கொடிகாமம், மீசாலை தெற்கை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே விபத்துக்குள்ளாகினர்.

மேலும் உள்நாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது முத்தமிழ் செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More