Take a fresh look at your lifestyle.

வவுனியாவில் வயலுக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட சோகம்!

Loading...

வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் வயலுக்கு சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

Loading...

இன்று மதியம் 2 மணியளவில் வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவரது உறவினர்கள் சந்தேகமடைந்து தேடியுள்ளனர்.

இதன்போது குறித்த நபரை வயல் பகுதியில் சடலமாக கண்டுள்ளனர். ஆறுமுகத்தான் புதுக்குளத்தை சேர்ந்த நல்லையா இராசேந்திரம் (வயது-44) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

ஓமந்தை பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உள்நாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது முத்தமிழ் செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More