Take a fresh look at your lifestyle.

முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவருக்கு நடந்த கொடூரம்!

முல்லைத்தீவில் முன்னாள் போராளி மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் புலிப் போராளியான அணில்ராசன் செல்வராசா என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் கடந்த பத்தாம் திகதி இரவு இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது.

விஸ்வமடுவிலுள்ள அவரது வீட்டிற்குள் இரவு வேளையில் புகுந்த மர்மநபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதன்போது அவரின் மகன் மீதும் தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் போராளி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாது என முன்னாள் போராளியான செல்வராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு விஸ்வமடு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உள்நாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது முத்தமிழ் செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More