Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 07-02-2019

Loading...

மேஷம்

மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்களில் சிலர்கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரைகெடுத்துக் கொள்ளாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்யோகத்தில் மற்றவர் களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். போராட்டமான நாள்.

சிம்மம்

சிம்மம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதி கரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி

Loading...

கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில்இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்துபேசுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: புதிய திட்டங்கள்நிறைவேறும். உறவினர் களின் அன்புத்தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பழைய பிரச் னைகளை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைஅமையும். வர வேண்டிய பணத்தைபோராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்பஉங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்.

மகரம்

மகரம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார் கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் இழந்தஉரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பிஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்துநீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். லேசாக தலை வலிக்கும்.வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் கள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More