இலங்கையில் தேடப்பட்டு வரும் நபருடன் பிரபல பாடகர் கைது
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட நான்கு பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அண்மைக்காலகமாக இடம்பெற்ற பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் மதுஷிற்கு நேரடித் தொடர்பு உண்டு எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல பாடகர் ஒருவரும் மதுஷுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகிறது. டுபாயில் போதைப்பொருளுடன் சென்ற போது இந்த சந்தேகநபர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் மிகவும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவராக மதுஷ் கருதப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் வர்த்தகம், படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் மதுஷிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது முத்தமிழ் செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி.