Take a fresh look at your lifestyle.

யாழ் சுன்னாகத்தில் ராஜ் சாரயக்கடை முதலாளியின் திருவிளையாடல்!! கோடிக்கணக்கில் மாட்டியது நந்தினியின் முக்கிய பொருள்

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு பனம் சாரயத்தை தருவித்து விநியோகிக்கும் சுன்னாகம் ராஜ் மதுபானக் கடை உரிமையாளர் ஒருவருக்கு எடுத்துவரப்பட்ட 371 பரல்களில் சுமார் 7 ஆயிரத்து 500 லீற்றர் எதனோல் (தூய மதுசாரம்) கைப்பற்றப்பட்டுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னிலங்கையிலிருந்து பாரவூர்தியில் ஒன்றில் எடுத்துவரப்பட்ட 20 லீற்றர் கொள்ளவுடைய 371 கான்களே கைப்பற்றப்பட்டது.

அதனை எடுத்து வந்த பாரவூர்திச் சாரதி மற்றும் அவரது உதவியாளர் இருவரும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு விநியோகிக்கப்படும் நந்தினி எனும் சாரயத்துக்கு கலப்படம் செய்வதற்காகவே இந்தப் பெரும் தொகை எதனோல் மதுபானக் கடை உரிமையாளரால் எடுத்துவரப்பட்டது என்று ஆரம்ப விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

1 லீற்றர் எதனோலில் சுமார் 100 சாராயப் போர்த்தல்களுக்கு கலப்படம் செய்வதால், மதுபானக் கடை உரிமையாளருக்கு பல கோடி ரூபா லாபம் கிடைப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வடக்கில் இந்தப் பெரும் தொகை எதனோல் மீட்கப்பட்டது இதுவே முதன்முறை என்று சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

எதனோல் என அழைக்கப்படும் தூய மதுசாரம் ஒரு கிளர்ச்சியை அல்லது போதையை ஏற்படுத்தும்.

அத்துடன், மதுசாரயத்துக்கு அடிமையாக்கும் பழக்கும் பொருளாகவும் காணப்படும் எதனோல் நச்சுத் தன்மையானது.

அத்துடன், குறிப்பிட்ட அளவைவிட எதனோல் அதிகரித்தால் அந்த சாரயத்தை பருகுவோரின் உடன்நிலை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கைதான இருவரையும் மற்றும் பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த சாரய கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

 

கைதானவர்களின் உறவினர்களின் கருத்துப்படி குறித்த சாராயக்கடை உரிமையாளரிற்கு 5 இற்கு மேற்பட்ட வீடுகள் இருப்பதாகவும், எங்கு பதுங்கியுள்ளார் என தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் குறித்த கடை முதலாளியை கைது செய்ய சுன்னாகம் பொலிசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More