Take a fresh look at your lifestyle.

முல்லைத்தீவில் விபத்தில் சிக்கிய ஜனாதிபதியின் வாகன தொடரணி, இருவா் பலி மேலும் இருவா் கவைலைக்கிடம்- படங்கள்

ஜனாதிபதியின் பாதுகாப்பாக சென்ற இராணுவ கொமாண்டோ பிாிவின் வாகனம் விபத்துக்குள்ளான சம் பவத்தில் இருவா் உயிாிழந்துள்ளதுடன் மேலும் பலா் படுகாயமடைந்துள்ளனா்.

முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கோமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு
செய்து வவுனியா பகுதி நோக்கி வருகைதந்தவேளை இவ் விபத்தில் சிக்கியுள்ளது.

தட்டாலை பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்காகியுள்ளதுடன்
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அத்துடன் விபத்திற்கு இலக்கான இராணுவ வாகனத்தின் பாகங்கள் குறித்த பகுதியில் சிதறி காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

தற்போது அந்த இடத்தில் புகைப்படங்களை எடுப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும் விபத்தில் காயம்மடைந்தவர்களில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More