Take a fresh look at your lifestyle.

மூன்று இளைஞர்களை கோர பலி எடுத்தது ஆமி வாகனம்- படங்கள்

முச்சக்கர வண்டியுடன் இராணுவ வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் இயக்கச்சியில் இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றது.

உயிரிழந்தவர்கள் மூவரும் பளை புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும்  ஜெயக்குமார் , கரந்தாயை சேர்ந்த குகன், மற்றும் சாந்தன் ஆகியோரே உயிரிழந்தனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலதிக விவரங்கள் விரைவில்..

கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகி உள்ளனர்.

பளை இயக்கச்சி பகுதியில் இன்று 08-01-2019 மாலை இராணுவத்தின் கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியத்தில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

பளையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் கட்டைக்காடு இராணுவ முகாமிலிருந்து இயக்கச்சி 552 படைப்பிரிவு முகாமுக்கு டீசல் அடிப்பதற்காக பயணித்த இராணுவத்தின் ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பளையைச் சேர்ந்த 36 வயதுடைய பி.ஜெயக்குமார், பளை மாசார் பகுதியைச் சேர்ந்த, 32 வயதுடைய கே. குகதாஸ், சுழிபுரம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய எஸ். ரதீஸ்வரன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பளை காவற்துறையினரும் கிளிநொச்சி தடயவியல் காவற்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More