Take a fresh look at your lifestyle.

இந்த வருடத்தில் எனது பிளான் இதுதான்.! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்., தமிழ் திரையுலகிற்கு “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படம் மூலம் நடித்தவர். 2018 ம் வருடம் நிறைவு பெற்று 2019 ம் வருடத்தின் தொடக்கத்தில் தனது புத்தாண்டு விருப்பங்கள் குறித்து பேசியுள்ளார்.

இந்த வருட புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே கூடுதலாக உழைக்க முடிவு செய்துள்ளேன்., இந்த வயதில் தான் ஓடி ஆடி உழைக்க வேண்டும். இந்த வயதில் அமைதியாக இருந்துவிட்டால் கடைசி காலத்தில் அமர்ந்து சாப்பிட இயலாது.

இந்த வருடத்தில் அதிகளவில் உணவு விடுதிகளை திறக்க முடிவு செய்துள்ளேன். அனைத்து விதமான பணிகளை மேற்கொள்வதற்கு முதலில் உடல் வலிமையானது முக்கியம்., அந்த வகையில் உடற்பயிற்சி செய்கிறேன். இதன் மூலமாக எந்த விதமான கவலையில் இருந்தாலும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

நீங்கள் எந்த செடிகளை விளைவிக்கிறீர்களோ அதே செடிதான் வளர்ந்து நமக்கு அதன் மூலம் காய் அல்லது கனியை வழங்கும். நமது உடலை எவ்வாறு கவனித்து கொள்கிறோம் என்பதை பொறுத்தே நமது வாழ்க்கை இருக்கும்.

தினமும் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்., ஒரு நாட்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தாலும் ஏதோ ஒரு இழப்பை சந்தித்தது போல் இருக்கும். தமிழ் திரையுலகில் கார்த்திக்குடன் தேவ் திரைப்படத்திலும்., சூர்யாவுடன் என்.ஜி.கே திரைப்படத்திலும் நடித்துள்ளேன் என்று கூறினார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More