Take a fresh look at your lifestyle.

பிறின்ஸ் பஸ் சாரதியின் கொலை வெறி பயணத்தால் நால்வர் பலி!! அதிர்ச்சி தகவல் வெளியானது.

நீர்க்கொழும்பு – சிலாபம் வீதியின் வலஹாபிடிய பிரதேசத்தில் அதிசொகுசு பேரூந்தொன்று ஹெமில்டன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 23 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் நால்வரின் நிலை பாரதூரமாக இருப்பதாகவும் எமது முத்தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பிறின்ஸ் நிறுவனத்தின் அதி சொகுசு பேரூந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து  சிலாபம் மாதம்பையை அண்மித்த போது பிரதான பாதையில் பயணிக்காது மாதம்பை ஹொரவங்குவ ஊடாக நாத்தாண்டி, தங்கொட்டுவ வழியாக கொச்சிக்கடைக்கு வரும் நோக்கில் பயணித்துள்ளது.

எனினும் நாத்தாண்டிய பகுதியை பஸ் அண்மித்த போது வீதியை விட்டு விலகி ஹெமில்டன் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரி (வயது 60) என்ற பெண் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் யார் என்பது பற்றிய விபரங்களை அறிய முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் காயமடைந்த23 பேரில் 04 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஏனையோர் சிறு சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 3.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் , உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

பலியானார்கள் காயமடைந்தவர்களின் விபரங்களை அறிந்து கொள்வதற்க்கு.!
மாறவில வைத்தியசாலை தொலைபேசி இலக்கம்.0322254861
மாறவில பொலிஸ் நிலையம் 
032225422
071-8591310

விபத்து தொடர்பில் மாரவில காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை, குறித்த பேரூந்து நிறுவனத்தின் ஒரு பேரூந்தில் மூட்டைப் பூச்சி தொல்லை இருந்ததை முறையிட்ட பயணியை பஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மிகத் தரக்குறைவாகப் பேசியிருந்தமையை எமது முத்தமிழ் செய்திச்சேவை வெளிச்சம் போட்டு காட்டியிருந்தது.

இந்நிலையில் குறித்த பேருந்து நிறுவனத்தை பற்றி அதிர்ச்சி கரமான தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

1) பஸ்சில் பயணிக்கும் ஒரு பிரயாணி 300ரூபா தொடக்கம் 500 ரூபாவரை பஸ் உரிமையாளர் இல்லாத நபர்களுக்கு கப்பமாக கொடுக்க வேண்டும்.!

2) பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கங்களை ஆசன பதிவின் போது பெற்று மிரட்டி பணம் பறிப்பது.!

3) யாழ் கொழும்பு பிரயாணிகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட எந்த முறைப்பாடுகளும் யாழ் பொலிசாரால் விசாரணை செய்வதில்லை.!

4) இரு பஸ்க்கு ஒரு நம்பர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.!

5) இராணுவ சேவை,US HOTEL பெயர் பலகையுடன் சடவிரோத காரியங்களில், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை.!

6) குறித்த விபத்திற்குள்ளான பேருந்திற்கு வீதி அனுமதி பத்திரமே இல்லாமல் பயணித்துள்ளமை.!

7)பஸ் ஓட்டுநர் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியபடியும் சிகரெற் பாவித்த படியும் சென்றதாக பிரயாணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பேரூந்து சாரதி அண்மையில் இன்னொரு பஸ்சில் சென்று கிளிநொச்சியில் அரச கட்டடத்தை மோதித்தள்ளியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே மனித உயிர்களோடு விளையாடும் இவ்வாறான கேடுகெட்ட நபர்களிற்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், உயிரிழந்த பயணிகளுக்கு குறித்த நிறுவனம் நினைத்து பார்க்க முடியாத அளவு நட்டஈட்டை கொடுக்க வேண்டும் எனவும் இவ்வாறான பஸ்களில் பதிவுகளை மேற்கொள்ளும் பதிவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பஸ் முதலாளி, சாரதிகளை கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More