Take a fresh look at your lifestyle.

யாழ் வந்த புகையிரதம் முன் பாய்ந்தவர் உடல் சிதறி பலியானார்- படங்கள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்து குளிரூட்டப்பட்ட புகையிரதம் முன் பாய்ந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

 

இச் சம்பவம் இன்று (24) முற்பகல் 11.45 மணியளவில் முகமாலை இராணுவச் சோதனைச் சாவடி முன்னர் இருந்த இடத்தில் இடம்பெற்றது.

அவரது சடலம் முழுமையாக சிதைவடைந்ததால் அடையாளம் காணமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தை அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் ராசா மகேந்திரராசா என தெரிவிக்கப்பட்டது.

எனினும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More