Take a fresh look at your lifestyle.

பூமிக்கு அழிவு நெருங்கிவிட்டது!

பசுமை வாயு அதிகரித்துள்ளதால் நிச்சயம் அழிவு ஏற்படும் என ஐ.நா சபையின் கீழ் இயங்கும் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றை உலக வானிலை அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

பொதுச் செயலாளர் பெட்டேரி டாலஸ் தெரிவித்துள்ளதாவது, நாம் உடனடியாக கார்பன் டை-ஆக்சைடு மற்றும் இதர பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டைக் குறைத்தே ஆக வேண்டும்.

இல்லையென்றால், காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமியில் ஏற்படும் தாக்கம் நிச்சயம் அழிவுக்கானது.

நாம் நடவடிக்கை எடுக்கவேண்டிய காலம் ஏற்கெனவே கடந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக, சுற்றுச்சூழல் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, புவி வெப்ப மயமாதல் எனப் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்குப் பசுமை இல்ல வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்திருப்பதே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More