Take a fresh look at your lifestyle.

ருத்ர வேள்வியில் கலந்து கொண்ட நூற்றிற்கு மேற்பட்டோரிற்கு நேர்ந்த விபரீதம்!!

களுதாவளை பிள்ளையார் ஆலய ருத்ர வேள்வியில் கலந்துகொண்டு ருத்ரமாலை பெறுவதற்கு சிக்குண்டவர்களில் 15 பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் குணசிங்கம்-சுகுணன் தெரிவித்தார்.

களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடாத்தப்பட்டுவரும் ஏகாதச ருத்ர வேள்வியின் நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை யாகம் நடைபெற்றது.

Loading...

இதன்போது அடியார்களுக்கு ருத்ரமாலை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இவற்றில் சிக்குண்டவர்களில் 100 பேர் வரை காயம் அடைந்துள்ளார்கள்.

இவர்களில் தற்போது 15பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Loading...

ருத்ரமாலை பெறுவதில் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்ட அடியார்கள் சக அடியார்களை நெஞ்சுப்பகுதி, இடுப்புப்பகுதியில் ஏறி மிதித்துச் சென்றுள்ளார்கள்.

இதனால் ஒருவரின் கை உடைந்துள்ளதுடன், இன்னும் இருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் 3 பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிசிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Loading...

ருத்ர மாலை பெறுவதற்கு காத்திர அடியார்கள் நூற்றுக்கணக்கில் சோர்வடைந்துள்ளதாகவும், மயக்கமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.