Take a fresh look at your lifestyle.

9 சிறுமிகளை கொன்ற கொடூரன் சிக்கினார்!

இந்தியாவின் டெல்லி நகரில் 9 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் 3 வயதில் இருந்து 7 வயதுள்ள குழந்தைகள் காணாமல் போனதாகவும், அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்படுவதாகவும் பொலிசாருக்கு புகார்கள் குவிந்தன.

அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையில் சுனில் குமார் என்ற 20 வயது இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. டெல்லி பகுதியில் வேலை இல்லாமல் சுற்றித்திரிந்த சுனில்குமார், பின்னர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

சாலை ஓரங்களில் தங்கி வசித்து வந்த அவர், தெருவில் விளையாடும் சிறுமிகளை சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர்களின் கை, கால்களை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

இவ்வாறாக, கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து இதுவரை  9 சிறுமிகளை சுனில்குமார் கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More