Take a fresh look at your lifestyle.

சர்வதேச ரீதியில் இலங்கைப்பெண் சாதனை!

சர்வதேச போர்ப்ஸ் சஞ்சிகையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய தெரிவான பெண்களில் இருவர் இலங்கையர்கள் ஆவார்.

2019ஆம் ஆண்டு அறிவியல் பிரிவில் எதிர்காலத்தை மாற்றும் 30 வயதுக்கு குறைவான 30 பேர் தெரிவு செய்யும் பட்டியலை சர்வதேச போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டது.

அதற்கமைய அந்த பட்டியலில் ஸ்டென்பர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் 28 வயதாக இலங்கை இளம் பெண்ணான ஹசினி ஜயதிலக்க பெயரிடப்பட்டுள்ளார்

Loading...

மனிதனின் உடலில் புற்றுநோய் எவ்வாறு செயற்படுகிறது, அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் புதிய கண்டுபிடிப்பினை ஹிசினி ஜயதிலக்க மேற்கொண்டார். இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தப் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார்.

இதேவேளை உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் 100 பெண்களின் பட்டியலை , வருடாந்தம் வெளியிடுகிறது. இந்தப் பட்டியலில் இலங்கை பெண்ணான ஆஷா டி வோஸ் தெரிவாகியுள்ளார்.

ஆஷா 100 பெண்களில் 23 வது இடத்திற்கு தெரிவாகியுள்ளார். ஆஷா டி வோஸ் கடல் சார்ந்த ஆய்வாளராக செயற்படுகின்றமை பெருமைக்குரியது.