Take a fresh look at your lifestyle.

காதலிக்கு காதலன் செய்த கொடுமை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தவருக்கு 3 ஆண்டுகளுக்கு குறைவாகவே நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த அலிஸ்ஸா நோசிடா என்ற 18 வயது பெண் தன்னுடைய வீட்டில் காதலனுடன் சேர்ந்து போதை பொருள் உட்கொண்டுள்ளார்.

Loading...

இதன்போது அதிகமானதால் மூச்சுத்திணறி உயிருக்கு போராடியுள்ளார்.

உடனே காதலன் உதவி செய்வான் என எதிர்பார்த்திருந்த வேளை பிரையன் வரேலா (20) தன்னுடைய காதலியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

அப்போது அலிஸ்ஸாவின் உயிர் பிரிந்த்துள்ளது. உடனே அவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்துள்ளான்.

பின்னர் அவளுடைய உடலை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது பொலிசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

Loading...

இந்த வழக்கனது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது “என் முட்டாள்தனமான செயல்களுக்காக நான் வருந்துகிறேன்” என குற்றவாளி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளிக்கு 34 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், தனது கைகளை மாநில சட்டங்கள் கட்டி வைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

குற்றவாளி இரண்டு வருடங்கள் கழித்து வெளியில் வரும்பொழுது நல்ல நடத்தையுடன் இருப்பார் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

அந்த பெண்ணின் குடும்பத்தினர் மரண தண்டனையை கோரியபோது, நீதிமன்றத்தின் இத்தகைய தண்டனை மற்றும் கருத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அலிஸ்ஸாவின் தாய் ஜினா பியர்சன் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகைச்சுவை போல் இருக்கிறது என விமர்சித்தார்.