Take a fresh look at your lifestyle.

இக்கட்டான நேரத்தில் கனேடிய பெண்மணி எடுத்த முடிவு..? தமிழகத்தில் குவியும் பாராட்டுக்கள்.!

 

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்கப் போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர்.

நடுராத்திரியில ஹரிணி காணாமல் போக, பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

‘ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தை விட்டு போகமாட்டோம்’ என்று அங்கேயே தங்கி இருக்கிறார்கள். காளியம்மாள் கர்ப்பிணியாக உள்ளதால், அவர் உணவு சாப்பிடாமல் அல்லாடி வருவது வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் என்று வெங்கடேசன் பதறி வருகிறார்.

இந்த செய்தியை படித்து கண்கலங்கிய கனடாவைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண், ‘காளியம்மாளை மருத்துவமனையில் சேர்த்து உடனே வைத்தியம் பாருங்க’ என்று உருக்கமாகச் சொன்னதோடு, தனது சார்பாக பத்தாயிரத்தை அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More