Take a fresh look at your lifestyle.

பாம்புகளின் உலகில் இந்த பாம்பு ராட்சசனாம். இந்த பாம்பு பற்றிய சுவாரஸ்யமான செய்தியை படித்து தெரிந்துகொள்ளுங்கள்…..

கொலைகார ராட்சசன்… ஆப்பிரிக்காவின் `பிளாக் மம்பா’ பாம்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா, படுபயங்கர விஷம் கொண்ட பாம்பு வகைகளில் முக்கியமானது. முக்கால் டன் எடையுள்ள மாட்டை, கடித்த பத்தாவது நிமிடம்… மாடு இறந்து கீழே விழும். மற்ற பாம்புகள், தன்னைத் தொந்தரவு செய்பவர்களைக் கொடூரமாகத் தாக்கும். ஆனால் இந்த `பிளாக் மம்பா’ சைக்கோ வகையைச் சேர்ந்தது. விலங்குகளையும், மனிதர்களையும் தேடித்தேடிக் கடிக்கும்.

உலகிலே வேகமாக ஊர்ந்து செல்லும் பாம்பும் இதுதான். ஆப்பிரிக்காவின் மிக நீளமான பாம்பாகவும், உலகின் மிக நீளமான பாம்புகளில் இரண்டாவது பாம்பாகவும் திகழ்கிறது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான உயிரினங்களை உணவாக உட்கொள்கிறது. நீளத்திலும் விஷத்திலும் ராஜநாகத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. `பிளாக் மாம்பா’ என்று அழைக்கப்பட்டாலும் பெரும்பாலும் இவை கறுப்பு நிறத்தில் காணப்படுவது அல்ல. மேற்புறத்தில் ஆலிவ் நிறத்திலிருந்து சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதியில் வெளிர் நிறத்திலும் இருக்கும். ஆனால், இவற்றின் வாயில் உள் பகுதி கறுப்பு நிறமாக இருப்பதால் இவை பிளாக் மாம்பா என அழைக்கப்படுகின்றன.

தான் அச்சுறுத்தப்படும்போது கறுப்பான வாயை அகலமாகத் திறந்து எதிரிகளிடம் எச்சரிக்கை கொடுக்கும். பிளாக் மாம்பாவின் தலைப் பகுதி முக்கோண வடிவத்தில் ஏறக்குறையச் சவப்பெட்டியின் வடிவத்தில் இருக்கும். எளிதில் சுருண்டு கொள்ளக்கூடிய, வேகமாக ஊறக்கூடிய, எதிரிகளைத் தாக்கி அழிக்கக் கூடிய வலிமையான உடலமைப்பைக் கொண்டது. இவை சுமார் 8 அடி முதல் 14 அடி வரை வளரக் கூடியது. 11 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More